குற்றம்செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை | மைத்துனர் உள்பட மூன்றுபேர் கைது

A teenager was killed by slitting his throat near Tiruparangunram Three people, including the brother-in-law, were arrested

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஈச்சநேரி பகுதியில் வாலிபர் கழுத்தை அறுத்து பிணமாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெருங்குடி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இறந்த வாலிபர் மதுரை கீரைதுறையைச் சேர்ந்த தவமணி மகன் காளிதாஸ் (வயது 35) கூலி வேலை செய்து வருகிறார் என்பதும் இவரது மனைவி வனிதா (வயது 27) இவர்களுக்கு 2 பையன்கள் உள்ளனர்.

நேற்று முன் தினம மாலை 6 மணியளவில் இவரது மைத்துனர் முத்துப்பாண்டி (வயது 31) இவரது நண்பர் மாரிமுத்து மற்றும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 4 பேரும் கொலை செய்யப்பட்ட இடத்தில் மது அருந்தி உள்ளனர்.

அதன்பின்னர் காளிதாஸ் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர் மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஒடி நின்றது.

பெருங்குடி போலீசார் முதல் கட்ட விசாரணையில் இறந்த காளிதாஸ் மனைவி வனிதா (வயது 27) கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

காளிதாஸ் வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கருதி வனிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இறந்த காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் கொலை செய்யப்பட்ட காளிதாஸ் உடல் அருகே மதுபாட்டில்கள் கிடந்ததால் காளிதாஸ் உடன் வந்தமைத்துனர் மற்றும் நண்பர்கள் மது அருந்தி போதையில் கொலை செய்தனரா? அல்லது கொலைக்கு வேறு ஏதும் காரணமா என பெருங்குடி போலீசார் 2 பேரிடம் விசாரணை செய்தனர்.

இறந்து காளிதாஸின் மனைவி மூன்று மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது, இதனால் மனைவியின் உறவினர்கள் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்ததில் மைத்துனர் முத்துப்பாண்டி உள்பட 3 பேர் காளிதாஸிற்கு மது கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பெருங்குடி போலீஸார் மைத்துனர் முத்துப்பாண்டி மற்றும் நண்பர்கள் மாரிமுத்து முத்தப்பாண்டி ஆகிய முவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: