
மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஈச்சநேரி பகுதியில் வாலிபர் கழுத்தை அறுத்து பிணமாக அருகில் உள்ளவர்கள் பெருங்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாலிபரின் உடலை ஆய்வு செய்தபோது.மதுரை கீரைதுறையைச் சேர்ந்த தவமணி மகன் காளிதாஸ் (வயது 35) என்பவர் தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார் என தகவல் தெரிந்தது.சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்., மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஒடி சென்றது.
கொலை செய்யப்பட்ட காளிதாஸ் உடல் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. காளிதாஸ் உடன் வந்த நண்பர்கள் மது அருந்தி போதையில் காளிதாஸைகொலை செய்தனரா ? அல்லது கொலைக்கு கள்ளக்காதல் தொடர்பா என பெருங்குடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெருங்குடி போலீசார் காளிதாஸ் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குற்றவாளியை தேடி வருகின்றனர்.