திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளத்தில் சமூக நீதிக்கான மாநாடு
Conference for Social Justice at Prangankulam near Tiruparangunram

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையங்குளத்தில் சமூக நீதிக்கான மாநாடு நடைபெற்றது. கூட்டத்திற்கு மளிகை நாகரத்தினம் தலைமை வகித்தார். கள்ளர் குல கூட்டமைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாசாமி உள்ளிட்ட அனைத்து சமுதாய அமைப்பினர் கலந்து கொண்டனர்.
சமூக நீதிக்கான மாநாட்டில் கல்வி பொருளாதார ரீதியிலான ஜாதி வாரிய கணக்கெடுப்பு எடுத்து அதன் மூலம் இட ஒதுக்கீடு மேற்கொள்ள வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்தனர். வன்னியருக்கு ஒதுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடுதான் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் திரள வைத்தது என கூறினர்.
மேலும், ஜாதி வாரியான கணக்கீட்டின் மூலமே பொருளாதார, கல்வி இடஒதுக்கிடு பெற முடியும். இதன் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டில் பயன் பெற முடியும்.
தமிழக அரசு வன்னியருக்கான இட ஒதுக்கீட்டில் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதித்து மேல்முறையீடு செய்யாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.