
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரம்புபட்டி பிரிவில் பெருங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சார்பு ஆய்வாளர்கள் செந்தாமரை, அனுமந்தன் தனிப்பிரிவு காவலர் லிங்கம் ,சுப்பு ஆகியோர் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் இரண்டரை டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
50 கிலோ எடையுள்ள, 50 ரேசன் அரிசி மூட்டைகள் போலீசார் சோதனையில் சிக்கியது. இதுகுறித்த போலீசார் விசாரணையில் அனுப்பானடியைச் சேர்ந்த பாலு மகன் வேல்முருகன் வயது 41 மற்றும் ஐவராதநல்லூரை சேர்ந்த ஆனந்த் மகன் சோவியத் வயது 21 ஆகியோர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் பாஸ்கரன் தலைமையில் போலீசார் வாகனத்தை கைப்பற்றினர்.