
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ள பராசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல் வயது 53 இவர் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வீட்டிற்கு திரும்பிய ரத்தினவேல் வீட்டின் பூட்டு உடைந்து உள்ளே வாலிபர் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரத்தினவேல் அவனியாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போதையில் உறங்கிய வாலிபரிடம் விசாரணை செய்ததில் பழங்கநத்தம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் நடராஜன் (வயது 21) என தெரியவந்தது.
மேலும் வீட்டிலிருந்த 40 கிராம் தங்கத்தை காணவில்லை என புகார் தெரிவித்ததையடுத்து போதை வாலிபரிடம் அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1