
திருப்பரங்குன்றம் கோவில் அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பதினாறாம் கால் மண்டபம் முன்பு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருநகரில் இருந்து அவனியாபுரத்திற்கு சென்று கொண்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சட்டத்திற்கு விரோதமாக 50 கிலோ எடை கொண்ட 25 மூடைகளில் 1250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த திருப்பரங்குன்றம் போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் மதுரையைச் சேர்ந்த வசந்த் முத்துமாரி மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
எனவே, பறிமுதல் செய்த வாகனம் மற்றும் மூன்று பேரையும் குடிமை பொருள் வழங்கள் கடத்தல் தடுப்பு பிரிவுவின் கீழ் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் மீது குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்யப்பட்டனர்.