திருப்பரங்குன்றத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வுக்காக மாநில அளவிலான சிலம்பம் போட்டி
State Level Chilambum Competition for Anti-Drug Awareness in Thiruparangundram

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பாம்பன் நகரில்மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது குழு மற்றும் தனிநபர் கான போட்டியில் சென்னை விழுப்புரம் காஞ்சிபுரம் அரியலூர் திருநெல்வேலி சிவகங்கை இராமநாதபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் சிலம்ப ஆசான் மாரிமுத்துதலைைமைதாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அதிகாரி ராஜா கலந்துகொண்டு
போட்டியினை தொடங்கி வைத்தார். சென்னை மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, காரைக்குடி, சிவகங்கை, அரியலூர் உள்ளிட்ட
13 மாவட்டங்களில் இருந்து 298 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
சிலம்ப போட்டியில் அவர்களுக்குள் தனித்திறமை, மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை மிகுந்த உற்சாகமாகவெளிப்படுத்தினார்கள்.
இதில் சுருள் வீச்சு, இரட்டைக் கம்பு சுற்றுதல், தீப்பந்தம், மான்கொம்பு, வளையத்திற்குள் சிலம்பம் என பல்வேறு வகைகளில் பார்வையாளர்களை மிகவும்பரவசப்படுத்தியது. தனித்திறமைபோட்டியில் மதுரை ஏ.ஆர்.வி.என்.தாய் கலை சிலம்பம்சாம்பியன்வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
குழுவினருக்கான போட்டியில் முதல் பரிசினை சென்னை மாம்பழத்தை சேர்ந்த யூத் கிளப் சிலம்ப அணிபெற்றது. 2-ம் பரிசை தேனி மாவட்டம் புலித்தேவன் சிலம்பம் அணியும், 3-வது பரிசை திருப்பரங்குன்றம் எஸ்.கே. எம்..உலக சிலம்பம் டிரஸ்ட்டும்பெற்றது
வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழக அரசின் வேலைவாய்ப்பில் கராத்தே மற்றும் யோகா ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளித்தது போல் சிலம்பம் பயின்ற ஆசங்களுக்கு வாய்ப்பளித்து உதவுமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.