செய்திகள்விருது | விழா | கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு உதய நாள் மற்றும் உலக இசை தின கலை விழா

Tamil Nadu Rise Day and World Music Day Art Festival at Thiruparangunram

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவில் தேவசேனா மண்டபத்தில் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு இசை கல்லூரி சார்பில் தமிழ்நாடு உதய தினம் மற்றும் உலக இசை தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு இசைகல்லூரி முதல்வர் ஸ்ரீமதி தலைமையில் விழா துவங்கியது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஸ் கண்காணிப்பாளர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்

அகில இந்திய வானொலி நிலைய கலைஞர் பாலாமணி ஈஸ்வர், ஸ்ருதி ரஞ்சனி, தியாகராஜன் குழுவினரின் கர்நாடக இசைபாடல்கள் பாடினர்.

பின்னர் பார்வையற்ற மாற்றுதிறனாளி அகில இந்திய வானொலி நிலைய கலைஞர் மகேஸ்வரி வெங்கட்ராமன் குழுவினரின் வீணை இசை மற்றும் ஆத்தூர் கலைமாமணி கோமதி குழுவினரின் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா முடிவில் விக்ரமன் நன்றியுரை கூறினார்.

 

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: