
திருப்பரங்குன்றத்தில் கல்லூரிக்குள் மாணவர்கள் இடையே நடந்த மோதலில் மற்ற மாணவர்களை அறிவாளால் வெட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் தனியார் கலைக்கல்லூரி கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கல்லூரியில் கொடிக்கம்பம் அருகே சக மாணவர்கள் மதுரை மாவட்டம் குப்ப நத்தத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜெகதீஸ் 19, திருநகர் சொர்ணம் காலனியை சேர்ந்த ஆண்டி மகன் முனீஸ்வரன் 19.
காமராஜர் புறம் முத்துராமலிங்கத் தேவர் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் தகராறு செய்து அவர்களை அறிவாளால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களை அரிவாளால் வெட்டிய சிறுவனைகைது செய்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1