அரசியல்செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்

OPS Supporters Consultation Meeting at Tiruparangundram

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் மதுரை நகர், தெற்கு வடக்கு மாவட்ட ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில பேரவை இணைச் செயலாளர் ராமமூர்த்தி, தலைமையில், மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முருகேசன், அவனியாபுரம் ராஜ்மோகன், செல்லம்பட்டி முன்னாள் ஊராட்சி ஓன்றியத் தலைவர் பவளக்கொடி, ராசு காளை, வக்கில் சேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடிக்கு அதிகாரமில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்டமுடியும். எடப்பாடி கூட்டுவது, பொதுக் குழு அல்ல பொய்குழு என்றும், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜீ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் அதிமுகவின் துரோகிகள் என்றும், பணத்துக்கு விலை போயினர் என குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில், மதுரை மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக முதல் முறையாக ஒபிஎஸ்- க்கு ஆதவளிப்போம் என, தீர்மானம் நிறைவேற்றினர். இதில், 1 பெண் உள்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுகவை கைபற்ற நினைக்கும் எடப்பாடி ஒழிக என கோஷமிட்டு, பரபரப்பை ஏற்படுத்தனர்.

வரும் 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என, எடப்பாடி அறிவித்ததை தொடர்ந்து ஒபிஎஸ் ஆதரவாளர்கள் முதன் முறையாக வெளிப்படையாக அதிமுக கூட்டம் நடத்தி எதிர்பை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மதுரை மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் உதய குமார், செல்லூர் ராஜு ,எம்எல்ஏ ராஜன் செல்லப்போ ஆகியோரை துரோகி என கூட்டத்தில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர்.
Back to top button
error: