செய்திகள்விபத்து

திருநகர் பகுதியில் பைக் மீது ஷேர் ஆட்டோ மோதியதில் இருவருக்கு பலத்த காயம்

Two people were seriously injured when a share auto collided with a bike in Thirunagar area

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக ஷேர் ஆட்டோவில் விபத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நின்று கொண்டிருக்கும் வாகனம் மீது ஷேர் ஆட்டோக்கள் மோதுவது தொடர்கதையாகவே ஆகிக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் மதுரை பைபாஸ் சாலையில் தலைக்கேறிய போதையில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது ஷேர் ஆட்டோ மோதியது. இதே போன்ற நிகழ்வானது நேற்று காலை மதுரை திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் அருகே பாண்டியன் நகர் ஆர்ச் இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் மீது ஷேர் ஆட்டோ பயங்கரமாக மோதியது.

இதில் இருவர் பலத்த காயம் அடைந்தனர் உடனடியாக அவர்களை அருகில் உள்ளவர்கள் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஷேர் ஆட்டோகளால் அதிக அளவு விபத்து ஏற்படுவது பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து செல்லும் பொழுதும் எதிரே வரும்பொழுது திடீர் திடீர் என மோதுவது தொடர்கதையாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. இது குறித்து சமூக அலுவலர் ஒருவர் கூறுகையில், இவர்கள் இரண்டு சவாரி முடித்தவுடன் மது போதை மற்றும் கஞ்சாவுடன் போதையுடன் வாகனத்தை இயக்குவதாகவும், இவர்கள் இந்த வேகத்தில் செல்கிறோம் என அவர்களாலே எங்கே செல்கிறோம் என கூட தெரியாத அளவிற்கு போதை தலைக்கேறி உள்ளது.

இதனால் வாகனத்தை தறிகட்டி ஓட விடுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுபோன்ற வாகன ஓட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் உரிமம் இல்லாத ஓட்டுநர் உரிமம் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க கூடாது எனவும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்கள் உயிர் காக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: