
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள சபிதா பாய் தனியார் பள்ளி வளாகத்தில், 76வது சுதந்திர தின துவக்கத்தை முன்னிட்டு ஜாக்சி உலக புத்தகத்தில் இடம் பெற 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களுடைய தனித்திறமை வெளிப்படுத்தும் வகையில் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவர்கள் ஓவியம் வரைதல், செஸ் போட்டி, கேரம் போட்டி, வில் அம்பு விடுதல், நடனம், பரதம் மற்றும் மிட் ப்ரைன் ஆக்டிவேஷன் என்ற கண்ணை கட்டிக்கொண்டு புத்தகம் வாசிப்பதும், கணக்கு எழுதுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல், எதிரில் இருப்பவர்கள் யார் ? எவ்வடிவம் பெற்றவர் ? அவர்கள் பையில் என்ன இருக்கிறது ? என்பனவற்றை தெரிவிக்கும் திறன் பெற்றவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை வியக்கும் வண்ணம் செய்தனர்.
இவர்கள் அனைவரும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். ஜான்சி உலக புத்தகத்தில் இடம் பெற ஐந்து வயது முதல் 25 வரை உள்ள மாணவ, மாணவியர் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தினார்.
மிட் பிரைன் ஆக்டிவேஷன் என்பது மாணவ, மாணவிகளின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும், எளிதில் எந்த முடிவையும் தீர்க்கமாக எடுக்கும் சக்தி படைத்தவர்களாக இருப்பார் என ஒருங்கிணைப்பாளர் அகிலா தெரிவித்தார்.