திருநகரில் ரூ.10 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பூங்கா பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு
10 lakh renovated park in Thirunagar dedicated to public

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள மீனாட்சி பூங்காவை புனரமைத்து ரூபாய் 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அப்பகுதி வாசிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நிதியின் மூலம், பூங்காவை புனரமைக்கப்பட்டு பூங்காவினுள் நகர் வாசிகள் பயன்பெறும் வகையில் நடைமேடை மற்றும் குடிநீர் தொட்டி மற்றும் ஹை – மாஸ் லைட் உள்ளிட்டவற்றை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மதுரை மேயர் இந்திராணி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து பூங்காவினுள் மரக்கன்று நடப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இதில் மண்டல தலைவர்.சுவிதா விமல், திமுக கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, உசிலை சிவா,காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்வேதா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டி, சமூக ஆர்வலர் பொன்.மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.