ஆன்மீகம்செய்திகள்

திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்

Tiruthankal Srininanarayana Perumal Temple Ani Pramotsava Festival Flag Hoisting

108 திவ்ய தேசங்களில் 49வது திவ்ய தேசமாக விளங்கும், திருத்தங்கல் ஸ்ரீநின்றநாரயண பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில் 108 திவ்ய தேசங்களில், மிகவும் பிரசித்திப் பெற்ற 49வது திருத்தலமாக விளங்கும், ஸ்ரீநின்றநாரயண பெருமாள் கோவில் உள்ளது. இத்திருக்கோவிலின் ஆனி பிரமோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆனி பிரமோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீநின்றநாராயண பெருமாள் சுவாமிக்கும், ஸ்ரீசெங்கமல தாயார் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

மேளதாளத்துடன், வேதமந்திரங்கள் முழங்க கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றம் நிறைவு பெற்றவுடன் ஊஞ்சல் மண்டபத்தில் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் – ஸ்ரீசெங்கமலதாயார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழா, வரும் 15ம் தேதி (வெள்ளி கிழமை) காலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மண்டகப்படி உபயதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: