
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில், காப்பு காட்டில் இருந்து வழி தவறிய புள்ளி மான் ஒன்று நுழைந்தது.
அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை விரட்டி கடித்தன. அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி, புள்ளி மானை பத்திரமாக மீட்டனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாய்கள் கடித்ததில் புள்ளி மான் மிகவும் காயமடைந்தது. திருச்சுழி கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுனிதா தலைமையில் மருத்துவக்குழு புள்ளி மானுக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனலிக்காமல் புள்ளி மான் பரிதாபமாக இறந்தது. வனத்துறை ஊழியர்கள் புள்ளி மான் உடலை, உடற்கூராய்வு செய்து காட்டுப் பகுதியில் புதைத்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1