
2022-2023-ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயனடையும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் முறையே விண்ணப்பித்து அதிக அளவில் பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1