
தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் “தமிழ்நாடு நாளாகக்- கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பெற்றது.
இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 06.07:2022 ஆம்நாள் முற்பகலில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கவளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளுக்கு, திருப்பரங்குன்றம், காக்கைப்பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தி.லீலா, மு.க.ஆ (தமிழ்), முனிச்சாலை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) ச.திருக்குமரன், சத்திரவள்ளாலப்பட்டி அரசு
உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) இரா. இந்திரா ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். ச.திருக்குமரன் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் மதுரை அனுப்பானடி செளராஷ்ட்ர பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தி.பா.விஜயலட்சுமி, முதல் பரிசாக ரூ.10000/, மதுரை திருக்குடும்ப பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.மகாலெட்சுமி, இரண்டாம் பரிசாக ரூ.7000, நாகமலை சிறுமலர் வெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி. பா.கோபிகாஸ்ரீ மூன்றாம் பரிசாக ரூ.5000, வென்றனர்
பேச்சுப்போட்டியில் நிர்மலா மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.யாழினி, முதல் பரிசாக ரூ.10000/-, கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாகார்த்திகா தேவி இரண்டாம் பரிசாக ரூ.7000/-, கூடல்நகர் புனிதஅந்தோனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவி தெ.வர்ஷினி, மூன்றாம் பரிசாக ரூ.5000,- வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் பிநிதொரு நாளில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை மதுமை மாவட்டத் தமிழ் ஊளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா மேற்கொண்டார்.