ஆர்ப்பாட்டம்செய்திகள்

தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம் | 30 பேர் கைது

Sudden protest against Tamil Nadu Governor Ravi 30 people were arrested

மதுரை காமராஜர் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவிற்கு வரும் தமிழக ஆளுநர் ரவிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 136 பேர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த போவதாக தகவலையடுத்து பல்கலைகழக வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிய 136 பேரை பல்கலை நிர்வாகம் நிதி சுமை காரணம் காட்டி பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேரும் அரசின் காரணத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக 54 வது பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநர் ரவி வருவதையடுத்து தங்களது கோரிக்கையை தெரிவிக்கும் வகையில், மனு கொடுக்கும் போராட்டம் நடத்த போவதாக ஒட்டிய சுவரொட்டிகளால் உளவுத்துறை போலீசருக்கு தகவலை வந்ததை அடுத்து, நாகமலைபுதுக்கோட்டை முதல் பல்கலைக்கழகம் வரையிலான 11 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இதனை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே திருவள்ளூர் சிலை முன்பு தமிழ் புலிகள்கள் கட்சியை சபேரறிவாளன், அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் பசும்பொன் பாண்டியன் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு, மதுரைக்கு வருகை தரும் ஆளுனர் ரவியை கண்டித்து மோசங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த 30 நபர்களை போலீசார் கைது செய்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: