செய்திகள்

தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல் முடிவு: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நாளை இரவு வெளியீடு

Results of 5 state assembly elections including Tamil Nadu

தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல் முடிவதால், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நாளை இரவு வெளியாக உள்ளது. மேற்குவங்கத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு நடப்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப் பேரவை தேர்தல்கள் கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

மேற்குவங்கம் தவிர மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவுற்றது. மேற்குவங்கத்தில் நாளை (ஏப். 29) இறுதி கட்ட மற்றும் 8ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஆளும் திரிணாமுல், பாஜக, இடதுசாரிகள் – காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணாமுல் – பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, மாநிலத்தில் பேரணிகளை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் கட்சிகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் இறுதி கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் காணொலி வாயிலாக பிரசாரத்தில் கலந்து கொண்டானர். நாளை நடைபெறவுள்ள இறுதிகட்ட வாக்குப்பதிவு 35 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 84,77,728 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இறுதி கட்டத் தேர்தலில் 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாளையுடன் 5 மாநில தேர்தல் முடிவடைய உள்ளதால், எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் மே 2ம் தேதி 5 மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

பிரபல தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நாளை இரவு வெளியாக உள்ளதால், எந்தெந்த கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று யூகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இருந்தும் கருத்துக் கணிப்பு முடிவுகள் சில நேரங்களில் பொய்த்து போனதும் உண்டு.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 26, மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மற்றும் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும்,

மாநிலங்களில், மார்ச் 27ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 2021 ஏப்ரல் 29ம் தேதி (நாளை) மாலை 7.30 மணிக்கு இடைபட்ட காலத்தை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்ட காலமாக அறிவிக்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126ஏ பிரிவு துணைப்பிரிவு 1-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126(1)(பி) பிரிவின் கீழ், மேலே கூறப்பட்ட சட்டப்பேரவை பொது தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஒவ்வொரு கட்ட தேர்தல் முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, கருத்து கணிப்பு அல்லது எந்தவித கணக்கெடுப்பு முடிவுகள் உட்பட தேர்தல் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியிட தடைவிதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக 2021 மார்ச் 24ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. அதனால், நாளை இரவு கருத்துக் கணிப்பு முடிவுகளையும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளையும் அறிவதற்காக, 5 மாநில மக்களும், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: