அமைச்சர்செய்திகள்

தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமை | முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் பேட்டி

50 lakh youth in Tamil Nadu are addicted to drugs Former minister RB Udayakumar interviewed in Madurai

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்றில் குளித்த இருவர் நேற்றைய முன்தனம் மாயமான நிலையில் சோழவந்தான் தீயணைப்பு துறையினர் ஒருவரின் உடலை பிணமாக கைப்பற்றினர். தொடர்ந்து ராணுவ வீரரான மற்றொருவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை மேலக்கால் அருகே மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட ராணுவ வீரரான வினோத் குமாரின் உடலுக்கு மலரஞ்சலி வைத்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வலியுறுத்தியதின் பேரிலும் தண்ணீரை நிறுத்த சொல்லி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதின் அடிப்படையில் தேடப்பட்ட ராணுவ வீரரின் உடல் இன்று காலை அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது. மீட்க்கப்பட்ட ராணுவ வீரர் வினோத்குமாரின் உடலுக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

உயிரிழந்த ராணுவ வீரர் உட்பட இருவரின் குடும்பத்திற்கு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு போதை விழிப்புணர்வு மற்றும் செயல்களை விடுத்து போதை ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் தமிழக முதல்வர் தீவிர கண்காணிப்பில் போதை பொருட்கள் ஒழிப்பை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.

தமிழக அரசு யூரியா தட்டுப்பாடு மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தட்டுப்பாடுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார். இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் புதிய கணேசன், வாடிப்பட்டி யூனியன் தலைவர் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், அரியூர் ராதாகிருஷ்ணன் ,மேலக் கால் கிளைச் செயலாளர் காசிலிங்கம் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய பேரூர் கழக கிளை கழக.நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: