தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,000ஐ நெருங்கியது:ஒரே நாளில் 98 பேர் பலி
Tamilnadu Corona Attack

தமிழகத்தில் மேலும் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 (11,30,167) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் மேலும் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 11,30,167 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 15,114 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 10,06,033 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,826 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 51 பேரும், தனியார் மருத்துவமனையில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 4,250 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,14,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,23,78,247 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,30,042 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1,10,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 6,82,519 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 10,239 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,47,610 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 6,426 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 264 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 195. வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.