
மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 30) என்பதும், இவர் மதுரையில் உள்ள துணிக்கடைகளில் ஆர்டர் பெற்று வடமாநிலத்தில் இருந்து மொத்த துணி வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்.
மாத வாடகைக்கு அந்த லாட்ஜில் தங்கி இருந்துள்ளார். இந்தநிலையில், அறையை காலி செய்து விட்டு, சென்ற போது லாட்ஜு மேலாளர் உறங்கி இருந்த போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை அணைத்து விட்டு, மேலாளரிடம் இருந்து செயின் மற்றும் மோதிரத்தை திருட முயற்சி செய்துள்ளார்.
அப்போது அதை தடுத்த மேலாளரை கொலை செய்து நகையை பறித்து தப்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, திடீர்நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கோபால கிருஷ்ணனை பிடித்த மேலும் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.