காவல்துறைசெய்திகள்

டேங்கர் தண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க ADGP உத்தரவு

24.02.2020 மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த டேங்கர் தண்ணீர் லாரி ஓட்டுனர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி இரு சக்கர வாகனத்தை முந்திச்செல்ல முயற்சித்தபோது பக்கவாட்டில் உள்ள கண்ணாடியையும் பார்க்காமல் இருசக்கர வாகனத்தின் மீது உரசியதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் கீழே விழுந்த அடுத்த நிமிடம் லாரியின் பின்பக்க சக்கரம் அந்த பெண்ணின் தலையில் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள் லாரி ஓட்டுனரை உடனடியாக கைது செய்து லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

அவர் உத்தரவுப்படி லாரி ஓட்டுனர் நேற்று கைது செய்யப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாநகரில் இது போன்று சாலை விதிகளை மீறும் தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து தண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களையும் சரிபார்க்கும்படி மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

three × three =

Related Articles

Close