
மதுரை டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு தெரு நாய்கள் சண்டை போட்டுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மூன்று நபர்கள் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஒரு நாயின் மீது மூன்று நபர்கள் பலமாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே இந்த நாய் பலியானது. இதைக் கண்ட விலங்கு நல ஆர்வலர்கள், சாய் டிரஸ்ட் நிறுவனர் மயூர் ஹசிஜா, தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இறந்த நாயை இன்று காலை தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்க இருப்பதாக மயூர் ஹசிஜா தெரிவித்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
1
+1