அமைச்சர்செய்திகள்

டாக்டர் கலைஞர் 99-வது பிறந்தநாள் | அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Dr. Kalaingar 99th Birthday | Minister Palanivel Thiagarajan

டாக்டர் கலைஞர் 99-வது பிறந்தநாளினை முன்னிட்டு, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக எல்லீஸ் நகர் 2ம் பகுதி, 75 -வது வார்டில் சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்வை, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு மாவட்டம் திமுக சார்பாக பாலமேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் தலைமை தாங்கினார்.

ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன். ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. பொறுப்பாளர் பாலகிருஷ்ணன்.

அலங்காநல்லூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வைத்தனர். பாலமேடு பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ .கே. மனோகரவேல் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார் .

மதுரை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளரும், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி ஏ வெங்கடேசன். எம். எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

அதனை த்தொடர்ந்து, தலைமைக் கழக பேச்சாளர் மதுரை சுந்தர்ராஜன், மாவட்ட அவை தலைவர் பாலமேடு பாலசுப்ரமணியன். ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ,மாவட்ட துணைச் செயலாளர் விஜயலட்சுமி முத்தையன், மாவட்டப் பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பஞ்சு அழகு, பாலமேடு பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியராஜன்.

அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சாமிநாதன், பாலமேடு துணைத் தலைவர் ராமராஜன், ஒன்றிய துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரகுபதி, இடையப்பட்டி நடராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு உள்பட பேரூர் கழக பொறுப்பாளர்கள் பேரூர் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில், செல்வம் சந்திர ய்யா நன்றி கூறினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர்.
Back to top button
error: