செய்திகள்விருது | விழா | கூட்டம்

டர்னிங் பாயிண்ட் டிரஸ்ட் சார்பாக தமிழ் பாரம்பரிய விளையாட்டு திருவிழா

Tamil Traditional Sports Festival on behalf of Turning Point Trust

மதுரையில் உள்ள பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஓ ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  பாரம்பரிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் 250 மாணவர்கள் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சகாயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் குணசேகரன் மற்றும் டர்னிங் பாயிண்ட் டிரஸ்ட் நிறுவனர் ஹம்சீ சுகன்யா விர்ச்சுவல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஜெகதீசன் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சகாயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் குணசேகரன், மாணவர்களுக்கு மோர் மற்றும் சுண்டல்களை கொடுத்து மாணவர்களை உற்சாகத்துடன் விளையாட உதவி செய்தார் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: