செய்திகள்போலீஸ்

ஜெயபாரத் குழும வருமானவரி சோதனை நிறைவு / ரூ.165 கோடி பணம் / 14 கிலோ தங்கம் / ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது

Jayabharat Group Income Tax Audit Completed / Rs.165 Crore Cash / 14 Kg Gold / Rs.150 Crore Property Documents Trapped

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் ஜெயபாரத் கட்டுமான நிறுவனம் உள்ளது. ஜெயபாரத் மற்றும் துணை நிறுவனங்களின் பங்கு தாரர்களாக அழகர், ஜெயகுமார், முருகன்.சரவணகுமார், செந்தில்குமார் உள்ளனர்.

மேலும் இதன் சகோதர நிறுவனங்களான கிளாட்வே சிட்டி. கிளாட்வே கிரின் சிட்டி, அன்னை பாரத், என்ற பெயரில் மதுரையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகள்கட்டி விற்பனை செய்கின்றனர்.

கடந்த 20 தேதி காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் ஜெயபாரத் குழும நிறுவன பங்குதாரர் வீடுகள் அலுவலகங்களில் சோதனை செய்தனர். வருமானவரித்துறையினர் சோதனையில் முருகன் என்பவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம் 75 கோடி, தங்கம் 3 கிலோ 200 gm ஆவணங்கள் 93 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டது.

செந்தில்குமார் என்பவரது வீட்டில் 2 கிலோ 700gm தங்கம் 1 கோடியே 96 லட்டம் மதிப்பில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. சரவணகுமார் வீட்டில் 3 1/2 கிலோ தங்கம் பணம், வைரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அழகர் வீட்டில் பணம் 90 கோடி ரூபாய்க்கும் 130 கோடிக்கு செத்து மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

ஜெயகுமாரின் கோச்சடை வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4 கிலோ தங்கம், பணம் ஆவனங்கள் கைப்பற்றப்பட்டது. ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீட்டில் தங்கம் 14 கிலோவும் பணம் 165 கோடியும், 235 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மதுரையில் பிரபல கட்டுமான நிறுவன அதிபர்களின் வீட்டில் 14 கிலோ தங்கம், 165 கோடி பணம். ரூ.235 கோடி மதிப்புள்ள ஆவணம் கைப்பற்றப்ட்டது குறித்து இப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: