செய்திகள்போலீஸ்

ஜெயபாரத் & கிளாட்வே சிட்டி புரோமோட்டர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை 13 மணி நேர சோதனை | நாளை மாலை வரை சோதனை தொடரும்

நாளை மாலை வரை சோதனை தொடரும்

மதுரையில் பிரபல கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தின் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, அன்னை பாரத் சிட்டி,கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு, குறைவான வரிகட்டி வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த தகவலையடுத்து ஜெயபாரத் கட்டுமான நிறுவன பங்குதாரர்கள் அழகர், ஜெயகுமார்,முருகன், சரவணன் உள்ளிட்ட 5 பேர் வீடுகள், அவனியாபுரம், விரகனுார், கோச்சடை, ஊமச்சிகுளம் திருப்பாலை அலுவலகங்கள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 13 மணிநேர அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை, சென்னை, ஹைதராபாத் டெல்லி போன்ற இடங்களில் இருந்து 35க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அழகர் மற்றும் முருகன் ஆகியோரது வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரம் வரவழைத்தனர்.

மேலும் ஐதராபத்திலிருந்து கணினி மென் பொறியாளர் வரவழைக்கப்பட்டு சோதனை தொடர்கிறது. வருமானவரித்துறையினர் புதிதாக இரண்டு ஹார்ட்டிஸ்க் கொண்டுவரப்பட்டு அவற்றில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நகை மதிப்பிட்டாளர் குழு வரவழைக்கப்பட்டு நகை மதிப்பிடும் பணி நடைபெறுகிறது.

கடந்த 20 வருடங்களாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தினர் மீது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்வது இதுவே முதல் முறை. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் நிதி பெறப்பட்டுள்ளது என்ற செய்திகளும் வந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள நிலையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைபடுத்தபடும் நிலையில் நாளை மாலை வரை சோதனை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். கணினி வல்லுனர் பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவை கொண்டு செல்வதால் மேலும் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
45
+1
0
+1
0
+1
27
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: