ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து சோழவந்தான் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
A demonstration was held in front of the Cholavandan Transport Workshop against the GST levy

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து, மாநிலங்கவையில் குரல் எழுப்பிய திமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்த மத்திய அரசைக் கண்டித்து, தமிழக முழுவதும் திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் அரசு பேருந்து பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பணிமனை முன்பாக தொ.மு.ச. மதுரை மண்டல பொதுச் செயலாளர் மேலூர்
அல்போன்ஸ் வழிகாட்டுதலின்படி, சோழவந்தான் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜோதிராம் மற்றும் சங்கப்பிரச்சார செயலாளர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், தங்கராஜ், ஹபீப் முகமது மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மத்திய பாஜக அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.