செய்திகள்

சோழவந்தான் லயன்ஸ் சங்க தலைவராக எம்.மருதுபாண்டியன் பொறுப்பேற்பு

M. Maruthupandian is the president of the Cholavanthan Lions Club

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவராக தொழிலதிபரும் கல்வியாளருமான எம். மருதுபாண்டியன் பதவியேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் பாண்டியராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து சண்முகசுந்தரம் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட ஆளுநர் செல்லப்பாண்டி, மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சசிகுமார், தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாவட்ட அமைச்சரவை முதன்மை நிர்வாகிகள் ஜெகநாதன், பிச்சை மாரிமுத்து, செல்வம் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடர்ந்து முதல் துணைத்தலைவர் கண்ணன், இரண்டாம் துணைத்தலைவர் பாஸ்கரன், செயலாளர் பிச்சைமணி, பொருலாளர் கந்தன், முன்னாள் தலைவர் ஆறுமுகம் உறுப்பினர் பெருக்க தலைவர் சரவணன், எல். சி. ஐ .எஃப் ஒருங்கிணைப்பாளர் முத்துலிங்கம், சேவை திட்ட பொறுப்பாளர் பரிசுத்த ராஜன், மக்கள் தொடர்பாளர் தங்கராஜ், சங்க ஆலோசகர் மற்றும் பொறுப்பாளர் செல்லப்பாண்டி, சங்க ஒருங்கிணைப்பாளர் ஜவகர் ஆகியோர் 2022_23 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பதவியேற்றுக் கொண்ட அரிமா சங்கத் தலைவர் எம் மருது பாண்டியனுக்கு எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா நிர்வாகி வள்ளிமயில் அரசியல் கட்சி பிரமுகர்கள் வார்டு கவுன்சிலர்கள் நகை அடகுக்கடை சங்க நிர்வாகிகள் வர்த்தக சங்க நிர்வாகிகள் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் நண்பர்கள் குடும்பத்தார்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: