சோழவந்தான் பேரூர் அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்
Cholavanthan AIADMK consultative meeting for local elections

சோழவந்தான் பிப் 2 சோழவந்தான் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலை முன்னிட்டு அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி தியாகு கேபிள் மணி ஆகியோர் வரவேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் தனராஜ், மாணவர் அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி ஆகியோர் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளிலும் தேர்தல் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து 18-வார்டுகளில் அதிமுக சார்பாக போட்டியிட கூடிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரையும் கட்சி நிர்வாகிகளிடம அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமலிங்கம், கருப்பட்டி தங்கப்பாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, முனியாண்டி கூட்டுறவு சங்க தலைவர்கள் மலைச்சாமி என்ற செழியன், வழக்கறிஞர் கண்ணன், அசோக், வணங்காமுடி ராமன், மாணவரணி ராமசாமி, பிஆர்சி நாகராஜன், சோலை கண்ணன், ஜெயபிரகாஷ், குருவித்துறை பாபு, கண்ணுச்சாமி சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.