கல்விசெய்திகள்

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மாணவிகள்

Students painted awareness paintings on solid waste management in Cholavanthan Municipality

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில்.புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய சுற்றுச்சுவர் பகுதிகளில், சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளனர்.

இந்த ஓவியங்கள் அப்பகுதி மக்களை கவரும் வகையிலும், அனைவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்த ஓவியங்களை சோழவந்தான் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு பாராட்டி வருகின்றனர்.

ஓவியங்கள் வரைந்த மாணவிகளை பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: