செய்திகள்
சோழவந்தான் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு 18வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை
18th Ward public demand for basic facilities in Cholavantan Municipality

சோழவந்தான் பேரூராட்சி 18-வது வார்டில் வெற்றி பெற்ற லதா கண்ணன் பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதி கோரிக்கைகள் குறித்து நேரில் சென்று மனு வாங்கினார்.
அப்போது பேரூராட்சியில் குடிநீர் தெருவிளக்குகள் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பேரூராட்சி துணைத் தலைவரிடம் 18 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக 18வது வார்டு பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் சாக்கடை வசதிகள் செய்துதரக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
இது குறித்து கூறிய பேரூராட்சி துணைத் தலைவர் பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் செய்து தரப்படும் என்று கூறினார்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1