செய்திகள்

சோழவந்தான் பேரூராட்சியில் போட்டியிட பாஜக சார்பில் வேட்புமனுத் தாக்கல்

BJP files nomination

மதுரை, பிப்,02 / 2022

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அனைத்து கட்சிகள் சார்பில் அனைத்து பகுதிகளிலும் தாக்கல் செய்யும் நிகழ்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது இதில் பாஜக சார்பாக மூணாவது வார்டுக்கு பாஜக விவசாய அணி மாநில செயலாளர் மணி முத்தையா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதேபோல் ஐந்தாவது வார்டுக்கு சிவகாமி லிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார் முன்னதாக பாஜகவினர் சோழவந்தான் உள்ள பாஜக விவசாய சேவை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

இதில் மாவட்ட தலைவர் மகா சசிதரன் ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி தொகுதி செயலாளர் கோவிந்த மூர்த்தி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல்ஏழாவது வார்டு சிவராம சுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் ஏழாவது வார்டு சுயேச்சையாக ராஜேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் அலுவலர் சுதர்சன் உதவி தேர்தல் அலுவலர்கள் ஆலய லோகேஷ் முத்துப்பாண்டி ஆகியோர் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டனர்.

இதேபோல் மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், தலைமையில் மூன்று முறை மதுரை மாமன்ற கவுன்சிலராக இருந்த, அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர், 73 வது வார்டு வட்ட செயலாளராக இருந்த ராஜா ஸ்ரீநிவாசன், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, போட்டியிடும் பாஜக வின் மாநில விவசாய அணி துணைத் தலைவர், வேட்பாளர் எம்விஎம் மணி (எ) முத்தையா  வேட்புமனு தாக்கல் செய்தார். உடன், மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், வக்கீல் முத்துமணி, விஜயகுமார்,தேர்தல் அலுவலர் ஆலயலோகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: