
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாத சிவாலயத்தில் ஆனிமாத பிரதோஷ விழா நடைபெற்றது.
ரவிச்சந்திர பட்டர் பரசுராம சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் சந்தனம் இளநீர் திருநீறு உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் திருக்கோவிலை வலம்வந்தார்.
திரளான பக்தர்கள் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று பாடிக்கொண்டே பின்னால் சென்றனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திரு கோவில் நிர்வாக அதிகாரி இளமதி எம்விஎம் குழும தலைவர் மணி முத்தையா நிர்வாகி வள்ளிமயில் சோழவந்தான் அரிமா சங்க தலைவர் மருது பாண்டியன் செய்திருந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1