Hello Madurai

சோழவந்தான் நகர அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Cholavanthan City Arima Sangha Administrators Consultative Meeting

சோழவந்தான் நகர அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பிச்சைமணி முன்னிலை வைத்தார் . பொருளாளர் காந்தன் வரவேற்றார்.

எதிர்வரும், ஆகஸ்ட் 27ஆம் தேதி சோழவந்தானில் பொது மருத்துவ முகாம் சிறப்பான மருத்துவர்களை கொண்டு மிகப் பெரிய அளவில் நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. மருத்துவ முகாமில், சிறப்பு மருத்துவர் கொண்டு அதிக அளவிலான பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் சோழவந்தான் சுற்றுப்புற கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் பயன்பெறும் வகையில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அரிமா சங்க முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் தலைவர் மருது பாண்டியனிடம் இந்த ஆண்டிற்கான பொதுமக்கள் நலத்திட்டங்களை பரிந்துரை செய்தனர். இதில், நிர்வாகிகள் முன்னாள் ஆளுநர் செல்லபாண்டியன்,
டாக்டர் சசிகுமார், தங்கராஜ், ஜவகர், பரிசுத்தராஜ், முத்துலிங்கம், இன்ஜினியர் ராஜேந்திரன், கௌரவ தலைவர் கண்ணன், பாஸ்கரன், அருள்ராஜ் ,எல்ஐசி கார்த்திக், நூலகர் ஆறுமுகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: