சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம்
General Medical Camp organized by Arima Sangam of Cholavantan City

மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில், மருத்துவர் வேலு மற்றும் ரிதம் கிளினிக் இணைந்து பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற மருத்துவ முகாமை, அரிமா சங்கத் தலைவர் தொழிலதிபர் டாக்டர் எம்.வி.எம்.வி.எம்.மருது பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார்.
மருத்துவ முகாமில், இதய ஸ்கேன், சர்க்கரை நோய் பரிசோதனை, இசிஜி, கொழுப்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
மேலும், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் எம்.வி.எம்.மருது பாண்டியன் தலைமை வகித்தார்.
அரிமா சங்க முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டியன், மருத்துவர் வடிவேலு மற்றும் வேலு ஹார்ட் அண்ட் ரிதம் கிளினிக் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், முகாமை துவக்கி வைத்தார். சோழவந்தான் நகர மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதில், அரிமா சங்க நிர்வாகிகள் செயலாளர் பிச்சைமணி பொருளாளர் காந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.