
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மதுரை சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல்.உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்து இங்குள்ள வைகை ஆற்றில் தங்களது தாய் தந்தையருக்கு தர்ப்பணம் வழங்கினர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவதால் பித்ரு தோஷம் நீங்கி நலமுடன் வாழ இருப்பதாக கூறுகின்றனர். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும். ஏழைகளுக்கு பழங்கள் காய்கறிகள் உணவு பொட்டலங்களை வழங்கி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்கள்.
இதனையொட்டி திருவேடகம் ஏடகநாதர் ஏழவார் குழலியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
+1
+1
+1
+1
+1