ஆன்மீகம்செய்திகள்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா

Cholavanthan Jenakai Mariamman Thala History book release ceremony

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் தல வரலாற்று நூல் வெளியீட்டு விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் திமுக செயலாளரும், கவுன்சிலருமான வக்கீல் சத்திய பிரகாஷ், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்/ கோவில் செயல் அலுவலர் இளமதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

விவேகானந்தா கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தல வரலாறு நூலை வெளியிட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் சத்தியமூர்த்தி, அரசு தொல்லியல்துறை காப்பாட்சியர் சக்திவேல், முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன் ஆகியோர் தல வரலாறு நூலை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

கோவில் பணியாளர்கள் பூபதி, அர்ச்சகர் சண்முகம், கவிதா, பிரியா, வசந்த், பெருமாள், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில் வேல், திருவிளக்கு பூஜை குழுவினர், கோவில் மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நூலை வெளியிட்ட ஜெனகராஜ் ஏற்புரை நிகழ்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: