
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவருடன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர், பணி நியமன குழு மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர், பேரூர் செயலாளர் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அரசு போக்குவரத்து கழக சோழவந்தான் கிளை தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆர் எம் எஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கோயில் செயல் அலுவலர் இளமதி மற்றும் பணியாளர்கள்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் மொத்தம் சங்கம் கோட்டை கிராமத்தினர்.
இணைந்து பேருந்து நிலையத்தில் அன்னதானம் நடைபெற்றது. தலைவர் முகேஷ், செயலாளர் தமிழ்பாண்டி, பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் மார்நாடு, துணைச் செயலாளர் சுரேஷ் செயற்குழு உறுப்பினர்கள் சமரன், ரமேஷ், கருத்தபாண்டி, அழகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, முருகன், பாலு மற்றும் உறுப்பினர்கள் சேகர், வேலு, திருப்பதி, கார்த்திக், கனி ராஜா, கார்த்தி, கோபி, ராஜேஷ், சதீஷ்குமார், ஆனந்த், சதீஷ், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.