சோழவந்தான் ஜவுளி கடை நிறுவனருக்கு அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு சார்பில் விருது
Founder of Cholavanthan textile shop awarded by All India Clothing Welfare Organization

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வரும் பி. .எஸ். மணி ஜவுளி நிறுவனத்திற்கு அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு சார்பில் விருது வழங்கப்பட்டது.நிறுவனரை பொதுமக்கள் பாராட்டினார்.
சோழவந்தான் நகரில் கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பி. .எஸ் மணி ஜவுளி நிறுவனத்தை சோழவந்தான் சந்தனமாரிமுத்து அவர்களின் மகன் மணிகண்டன் பொறுப்பேற்று சிறந்த முறையில் ஜவுளி தொழிலில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். தீபாவளி, பொங்கல் மற்றும் திருவிழா காலங்களில் அதிக அளவிலான சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறார்.
சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் அதிக அளவில் வர்த்தகம் செய்து பயன்பெற்று வருகின்றனர். இதனை அறிந்த அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு நிறுவனம் அவருக்கு விருது வழங்கி சிறப்பித்து பாராட்டு வழங்கியது.
மதுரை மாநகர துணை மேயர் நாகராஜ் “இளம் வயது சாதனையாளர்” விருதினை வழங்கினார். இது குறித்து சாதனையாளர் விருது பெற்ற மணிகண்டன் கூறும் போது கிராமப்புற பொதுமக்களின் நலன் கருதி மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.
மிக அதிக அளவிலான ஆடைகளை நல்ல தரத்துடன் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். இதனை அறிந்த அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு விருது வழங்கி சிறப்பித்தது பெருமை தக்க ஒன்று.
இதனை கருத்தில் கொண்டு மென்மேலும் மக்களின் நலன் கருதி அனைத்து வகையான ஆடை களை விற்பனை செய்ய பிஎஸ்மணி ஜவுளி நிறுவனம் தயாராகவே உள்ளது என்று தெரிவித்தார்.