
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை ரவிச்சந்திர பட்டர் பரசுராம சிவாச்சாரியார் செய்தனர்.
தொடர்ந்து பிரியா விடையுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று பக்திப் பெருக்குடன் பாடினார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் எம்விஎம் குழும தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளி மயில், அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியன், பணியாளர்கள் பூபதி உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
இதேபோல் மேலகால் சிவன் கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் கோவிலிலும் விக்கிரமங்கலம் மருதீஸ்வரர் கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.