செய்திகள்

சோழவந்தான் அருகே ராமராஜபுரத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்

Minister Murthy inaugurated the double bullock cart race at Ramarajapuram near Cholavanthan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராமராஜபுரம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு யாதவ மகா சபை சார்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பெரிய மாட்டிற்கான பந்தய இடத்திலிருந்து விதை பண்ணை வரை சென்று வந்து பதினோரு கிலோமீட்டர் தூரத்தை முதலில் கடந்து முதல் பரிசை அலங்காநல்லூர் கல்லணை விஷ்வா ரவிச்சந்திரன், இரண்டாம் பரிசு கே கே பட்டி பதினெட்டாம்படி கருப்புசாமி மந்திரி அனீஸ் ,மூன்றாம் பரிசை தேனி பண்ணைபுரம் துளசி நாகராஜ், நான்காம் பரிசு ராமராஜபுரம் ராமநாதன் பெற்றனர். சிறிய மாட்டிற்கான போட்டியினை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்தார்.

இதில் முதல் பரிசை உலகுப்பிச்சாம்பட்டி ரமேஷ் ,இரண்டாம் பரிசு கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன், மூன்றாம் பரிசு பரவை குணா, நான்காம் பரிசு தேவாரம்பட்டி வீர திவ்யா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன் பரிசுகளை வழங்கினார்.

இதில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன் ஜெயராமன், மாவட்டத் துணைச் செயலாளர் புதூர் சேகர்ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், மாவட்ட விவசாய அணி நாச்சிகுளம் பாஸ்கரன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ண.

மற்றும் முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, சோழவந்தான்.பேரூர் துணை செயலாளர் கொத்தாலம் செந்தில்.. ஒன்றிய கவுன்சிலர் மேலக்கால் சுப்பிரமணி, வக்கீல் முருகன், குருவித்துறை மணிவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, ஊத்துக்குளி ராஜா, ஒன்றிய இளைஞரணி வெற்றிச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வனிதா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: