செய்திகள்விருது | விழா | கூட்டம்

சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Cholavantan Arima Sangh President gave welfare assistance on the occasion of his birthday

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான டாக்டர் எம்.மருதுபாண்டியன் தனது பிறந்த நாளை யொட்டி சோழவந்தானில் உள்ள தனக்கு சொந்தமான திருமண மஹாலில் ஏழை எளியோர் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

முன்னதாக சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள எம்விஎம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் தனது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார்.

பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்த ஆதரவற்றோர் மையங்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருது பாண்டியன் தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர்களுக்கு உதவிகள் வழங்கி வருவது சோழவந்தான் பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இவரது சமூக சேவையையும், தொண்டினையும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: