செய்திகள்மாநகராட்சி

சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு ஈஜிசி உபகரணம் வழங்கல்

Supply of EGC equipment to Cholavanthan Government Hospital

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகரின் மத்தியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சோழவந்தான், கருப்பட்டி, இரும்பாடி, மன்னாடி மங்கலம், குருவித்துறை, திருவேடகம், காடுபட்டி, தென்கரை, முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அரசு மருத்துவமனையில் இஜிசி உபகரணம் இல்லாததால் மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன், ராஜேஷ் கண்ணா ராம்குமார் உள்ளிட்டோர் இலவசமாக வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். அரசு தலைமை மருத்துவர் தீபா பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் மருத்துவர் சுபா முத்துலட்சுமி, செவிலியர்கள் ரேணுகா, ஜெய கௌரி ,மருந்தாளுநர் முத்துராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், குருசாமி, செல்வராணி, முத்துச்செல்வி சதீஷ், முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் மணிராஜ், திமுக நிர்வாகிகள் மில்லர் ஆட்டோ மார்நாடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: