சோழவந்தான் அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கும் விழா
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை மாவட்டம், அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதி வண்டிகளை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (06.01.2021) வழங்கி தெரிவிக்கையில்:
நீட் தேர் என்பது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு சவாலானது என்ற கருத்து இருக்கின்றது. மேலும் நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் நடைபெறுகின்ற இக்காலகட்டத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை தமிதழக அரசு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி நனவாக்கியுள்ளது.
7.5 சதவிகித இடஒதுக்கீடு மூலம் மதுரை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்பிற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள 17 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி தலா ஒரு இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் சுற்றுப் பயணத்தின்போது 7.5 சதவிகித இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்கள் முதலமைச்சமைர சந்தித்து நன்றி தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
முன்னதாக சோழவந்தான் அரசன் சண்முகனார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 44 மாணவ, மாணவியர்களுக்கும், சோழவந்தான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவிகளுக்கும் என மொத்தம் 344 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கோ.மாணிக்கம் தலைமையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் வழங்கினார்.
மேலும் உசிலம்பட்டி டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 301 மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.நீதிபதி முன்னிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் (மதுரை) வளர்மதி அவர்கள், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சின்னதுறை, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், வட்டாட்சியர் பழனிகுமார் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.