
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலை கடையை வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக மேலாண்மை இயக்குனர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட பாண்டியன் நகர் கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கணக்கு அலுவலர் பத்மபிரியா முன்னிலை வகித்தார்.
வட்ட வழங்கல் அதிகாரி ராஜ பிரியா, சார் பதிவாளர் மணிகண்டன், விற்பனையாளர் வினோத் குமார், சக்தி ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தி, மேலக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்தாண்டி, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ்.
மற்றும் பேரூர் முன்னாள் செயலாளர் முனியாண்டி , தெற்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் முல்லை ரமேஷ், பேரூராட்சி நிர்வாகி மில்லர் மற்றும் அரசு அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் நியாய விலை கடை பணியாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.