செய்திகள்விருது | விழா | கூட்டம்
சோழவந்தானில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70 வது பிறந்த நாள் விழாவில் அன்னதானம்
Food distribution at the 70th birthday celebration of DMUDika leader Vijayakanth at Cholavantan

தேமுதிக தலைவர் விஜயகாந்தின், 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக மேலக்கால் கிராமத்தில், தேமுதிக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றியச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் அவைத் தலைவர் வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேமுதிக, கொடியேற்றி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை, மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வீரக்குமார் செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் நல் கர்ணன், பொதுக்குழு உறுப்பினர் சோனை முத்து, மணவாளன் கிளைச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1