
மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பானி கோவில் தெரு பகுதியில் உள்ள குடிசை பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது சுமார் 4க்கும் மேற்பட்ட வீடுகளில் பற்றிய தீயை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.
என்னிடம் பலத்த சேதம் அடைந்தது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
முன் உதவியாக அரிசி காய்கறி மளிகை சாமான்கள் வழங்கினார். சேதமடைந்த வீட்டிலிருந்த பொருள்களுக்கு நிவாரணம் வழங்க ஆணையிட்டார்.
பேரூராட்சி மானியம் மூலம் வீடுகள் கட்டித்தர உறுதி அளித்தார். அவருக்கு உதவியாக அரசியல் கட்சியினர் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு உதவிகள் தொடர்பாக எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தி சென்றார்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன். மாவட்ட மாணவரணி மருதுபாண்டி. பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், திமுக கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் குருசாமி, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி சண்முகராஜா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் தவம்உட்பட பலர் உடனிருந்தனர்