
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது கடந்த 14ஆம் தேதி பால்குடம் அக்னிச்சட்டி திருவிழா 15ம் தேதி பூக்குழி திருவிழா ஹலோ சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது கடைசி நாள் திருவிழாவான தீர்த்தவாரி திருவிழா இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் நடைபெற உள்ளது.
அப்போது அம்மன் சர்வ அலங்காரத்தில் ஊஞ்சல் ஆட உள்ளார் இதனை கான சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் கூட உள்ளனர். ஆகையால் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு திடீரென வைகை ஆற்று பகுதிக்கு வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தீர்த்தவாரி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் வடக்கு மாவட்ட மாணவரணி மருதுபாண்டியன் நிர்வாகி சிபிஆர் சரவணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் பேரூர் செயலாளர் முனியாண்டி பேரூர் நிர்வாகி வழக்கறிஞர் சத்யபிரகாஷ் சோழவந்தான் தொழிலதிபர் R.ஸ்டாலின் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை சங்கோட்டை சந்திரன் ரவி மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.